தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான கூட்டமைப்பு சேலத்தில் தொடக்கம்

Oct 10, 2026 - 16:21
 48
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான கூட்டமைப்பு சேலத்தில் தொடக்கம்

சேலம் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான கூட்டமைப்பு சேலத்தில் தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா கூட்ட அரங்கில் பஞ்சமி நில மீட்பு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பஞ்சமி நிலங்களின் கூட்டமைப்பு தலைவர் தாதா பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஒதுக்கப்பட்ட மக்கள் குடியரசு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார் அப்போது அவர் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் ஏக்கர் மேற்பட்ட நிலம் உள்ளது என்றும் ஆனால் தற்போது பல ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களின் அளவுகள் குறைந்து உள்ளது என்றும் அதை மீட்பதற்கு தமிழக முழுவதும் நாம் ஒன்றிணைந்து போராடி மீட்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் கூறிய தடா பெரியசாமி தற்போது உள்ள சூழலில் நமது ஒற்றுமை உடன் போராடி தமிழக அரசு இடம் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு தனி சட்டத்தை பஞ்சம் நிலங்கள் மீட்பதற்கு ஏற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்கான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் தற்போதுள்ள முதல்வர் இதில் கவனம் எடுத்துக் கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்டு வழங்கிட வேண்டுமென தடா பெரியசாமி கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்வில் சரசுரம் ரவி எழுதிய உதிரி பூக்கள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாவில் நடைபெற்றது நூலை தடா பெரியசாமி வெளியிட சரசுரம் ரவி பெற்றுக் கொண்டார் இதில் தமிழகத்திலிருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow