கே.கே.நகரில் 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனையின் 10-வது கிளை துவக்கம்

Oct 26, 2026 - 13:03
 5
கே.கே.நகரில் 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனையின் 10-வது கிளை துவக்கம்

திருச்சி கே.கே.நகரில் 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனையின் 10-வது கிளை துவக்கம்

சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற 'டென்டிஸ்ட்ரீ' பல் மருத்துவமனை, தனது 10-வது கிளையை திருச்சி கே.கே.நகர், ராஜாராம் சாலையில் உள்ள எம்.ஐ. காம்ப்ளக்ஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டிஜிட்டல் தொழில்நுட்பம், OPG, 3D ஸ்கேனிங், லேசர் சிகிச்சை, இம்ப்ளான்ட்ஸ் மற்றும் புன்னகை சீரமைப்பு போன்ற அதிநவீன வசதிகளுடன் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் டாக்டர் பாலமுருகன், டாக்டர் விஜயகுமார், டாக்டர் சுரேஷ், ஈஸ்வரி குரூப் தலைவர் சிவ சண்முகம், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் கருப்பையா, எம்.ஐ. காம்ப்ளக்ஸ் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர். நிறைவாக, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கார்த்திகா நவீன்குமார் நன்றி கூறினார்.

விறுவிறுப்பு தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow