இந்து சமய அறநிலையத்துறை சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா
இந்து சமய அறநிலையத்துறை சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில்
வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா
இந்து சமய அறநிலையத்துறை சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா 21.08.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கோலாகலமாக நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு இரா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையிலும் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், அறங்காவலர் குழுத்தலைவர் திரு.சோனா வள்ளியப்பா அவர்கள் முன்னிலையிலும் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் திருகோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவருமான திரு.வள்ளியப்பா பேசும்பொழுது என்றும் இறைப்பணியில் இணைந்திருக்கும் எங்கள் சோனா கல்வி நிறுவனத்தால் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டபத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா மற்றும் பக்கதர்கள், பொதுமக்கள் என பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
What's Your Reaction?



