admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
தலைப்பு: சேலம் ஜங்ஷன் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொலை மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தி விவரம்: சேலம் ஜங்ஷன் அருகே உள்ள சூலமங்கலம் பகுதியில், பல ஆண்டுகளாக அரசு துறைகளின் அனுமதி மற்றும் சட்ட விதிகளின்படி ரயில்வே சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு முதல் சேலம் ஜங்ஷன் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களும், பல நூறு சுமைதூக்கும் தொழிலாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களும் இணைந்து வாழ்வாதாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் தொழில் செய்வதாகக் கூறி ஐந்து லாரிகளை இயக்கி வந்துள்ளார். ஆனால், அந்த லாரிகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருந்ததால், சேலம் ஜங்ஷன் கூட்ஸ் ஷெட்டில் (Goods Shed) விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அவற்றை இயக்க முடியாது என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த லாரிகளுக்கு இன்சூரன்ஸ், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) உள்ளிட்ட பல்வேறு அனுமதிகள் பெறப்படாததாலும் அவற்றை இயக்க இயலாது என அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, ஜான் பீட்டர் இயக்கும் லாரிகளில் எந்த ஆவணமும் இல்லையெனினும், அரசு விதித்த விதிமுறைகளின்படியே அவற்றை இயக்க முடியும் என சங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் கோபமடைந்த அவர், சங்க உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது கட்சியின் பெயரைக் கூறி மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சேலம் ஜங்ஷன் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரவும், எங்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க நிர்வாகிகள் செல்வராஜ், விஜயகுமார் ஆகியோர் காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Sep 8, 2024 33
admin May 15, 2023 60
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354