சட்டவிரோதமாக ஆடு மாடுகளை சித்திரவதை செய்து வாகனங்களில் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க கோரி மனு
சட்டவிரோதமாக ஆடு மாடுகளை சித்திரவதை செய்து வாகனங்களில் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க கோரி மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு....
சேலம் மேச்சேரி அருகே உள்ள எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வழக்கறிஞரான இவர் இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் சேலம் மாவட்ட எல்லைக்குள் சட்டவிரோதமாக கால்நடைகளை சித்திரவதை செய்து அடைத்து கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளிலும் தொப்பூரில் இருந்து மேச்சேரி சாலை வழியாக வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் விலங்குகளை அடைத்து வைத்து வாகனங்களில் எடுத்து செல்கின்றனர் ஆந்திரா மகாராஷ்டிரா ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். இத்தகைய கால்நடைகளை கொண்டு செல்வதற்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது கால்நடைகளுக்கு போதுமான இட வசதியும் குடிநீர் உணவு மருத்துவம் எதுவுமில்லாமல் கால்நடைகளை சித்திரவதை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மேட்டூர் ஓமலூர் ஆகிய துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேச்சேரி காவல் நிலையத்தில் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மேச்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சட்டவிரோதமாக வாகனங்களில் அடைத்து செல்லப்படும் கால்நடைகளை மீட்காமல் லாரி மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகின்றனர் எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?



