அகரம் வெள்ளாஞ்செட்டியார் சமூகம் மகுடஞ்சாவடி கூடலூர் குன்னிப்பாளையம் நாகேந்திர மகரிஷி கோத்திரம் அருள்மிகு ஸ்ரீ புடவைக்காரி வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

Aug 9, 2025 - 08:54
 172

அகரம் வெள்ளாஞ்செட்டியார் சமூகம் மகுடஞ்சாவடி கூடலூர் குன்னிப்பாளையம் நாகேந்திர மகரிஷி கோத்திரம் அருள்மிகு ஸ்ரீ புடவைக்காரி வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக உறி அவிர்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்ற வருடம் வேப்பிலை, பூண்டு, வசம்பு ஆகியவைகளை பானையில் வைத்து உரியில் தொங்கவிட்டு வைப்பார்கள். அதை இந்த வருடம் உறி அவிர்த்து பானையில் வைத்து பொருட்களை பார்த்தபோது அனைத்தும் நன்றாக இருந்தது .இதை குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு கொடுப்பார்கள் குழந்தை பேரு கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ விநாயகருக்கும், ஸ்ரீ கன்னிமாருக்கும் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது . மேலும் ஸ்ரீ புடவைக்காரி வீரமாத்தியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான சமூக மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இந்த திருவிழாவில் செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் பெருமாள், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் ,துணைத் தலைவர்கள் ஜெயவேல் ,சண்முகசுந்தரம், அண்ணாதுரை, ரம்யா சேகர், துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், பழனிசாமி, சிவானந்தம், துணைப் பொருளாளர்கள் நடராஜன், வேலுமணி, கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பாளர் பரமானந்தம் மற்றும் அகரம் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் நாகேந்திர மகரிஷி கோத்திரத்தார் நண்பர்கள் குழுவினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow