admin Nov 26, 2025 34
admin Oct 31, 2026 10
admin Oct 30, 2026 10
admin Oct 28, 2026 9
admin Oct 10, 2026 57
admin Sep 28, 2026 14
admin May 25, 2026 49
admin Aug 21, 2025 56
admin Aug 9, 2025 66
admin Aug 9, 2025 213
admin Aug 6, 2025 52
admin Aug 6, 2025 50
admin Nov 16, 2026 6
admin Oct 26, 2026 16
admin Oct 10, 2026 17
admin Oct 10, 2026 15
admin Oct 10, 2026 12
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
மறைந்த சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்: கின்னஸ் சாதனையாளர் செஃப் ஆண்ட்ரூ கோரிக்கை!
சேலம்: சமீபத்தில் மறைந்த பிரபல சமையற்கலை நிபுணர் முனைவர் பத்மஸ்ரீ செஃப் தாமு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் செஃப் ஆண்ட்ரூ தமிழக அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சேலத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் மற்றும் கோரிக்கைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: "சமையற்கலைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து முடிசூடா மன்னனாக விளங்கிய எனது குருநாதர் செஃப் தாமு அவர்களின் மறைவு என்னை போன்ற எண்ணற்ற சமையல் கலைஞர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். தமிழகத்தில் சமையற்கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் அவருக்கு அளப்பரிய பங்கு உண்டு. அவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு முன்னணி நட்சத்திர விடுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், சமையற்கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சமையற்கலைக்கு வாழ்நாளெல்லாம் பங்காற்றிய அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், தமிழக அரசுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறேன்: பாடத்திட்டத்தில் வாழ்க்கை வரலாறு: தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரிகளிலும் செஃப் தாமு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பாடப்புத்தகமாக அறிமுகப்படுத்த வேண்டும். கல்லூரிகளுக்கு அவர் பெயர் சூட்டுதல்: சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அரசு கேட்டரிங் / ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகளுக்கு செஃப் தாமு அவர்களின் பெயரைச் சூட்டி கௌரவிக்க வேண்டும். அரசு அங்கீகாரம்: சமையற்கலைத் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகளைப் போற்றி, அவர் மறைந்த தினத்தை நினைவு கூர்ந்து அரசு உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும்." இவ்வாறு சமையல் கலைஞர்கள் சார்பில் கின்னஸ் சாதனையாளர் செஃப் ஆண்ட்ரூ தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Jan 18, 2025 29
admin Sep 22, 2024 72
admin Mar 26, 2023 40
admin Jul 28, 2024 567
admin Mar 26, 2023 379
admin Apr 29, 2023 357
admin Mar 26, 2023 338
admin Jul 23, 2023 299
admin Oct 2, 2026 11
admin Oct 2, 2026 12