சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகிட போவதாக எச்சரிக்கை

Sep 28, 2026 - 12:50
 8
சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகிட போவதாக எச்சரிக்கை

சேலம். 27-9-2026 சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகிட போவதாக எச்சரிக்கை...

சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஒன்று கூடி முற்றுகையிட்டனர் அப்போது அவர்கள் மகளிர் சுய உதவி குழு அமைத்திருக்கும் தங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சூரமங்கலம் கனரா வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்களை பெற்றதாகவும் ஆனால் அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களான கடனை தராமல் வணிக கடனாக வழங்கியதாகவும் அது மட்டுமன்றி தங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர் இதுகுறித்து தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சரசுராம் செய்தியாளரிடம் கூறுகையில்சேலம் மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் எல்லாம் கடன் வாங்கி தருவதாக கூறி ஒரு ஏஜென்ட் வணிக மேலாளர்கள் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு தினமும் ஆறு சதவீதம் கமிஷன் அடிப்படையிலேயே லோன் வாங்கி தருவதாகவும் ஏஜென்ட் உடன் சேர்ந்து கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் லோன் வாங்கிக் கொடுத்துவிட்டு பாதி அமௌண்டை கையில் எடுத்துக்கொண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டு கமிஷன் பிளஸ் கடன் கொட்டன தொகையை பெற்றுக்கொண்டு கடந்த நான்கு வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த 65 மகளிர் குழுக்களும் லோன் பெற்றார்கள் என்ற அடிப்படையிலே ஆறு விழுக்காடு கமிஷன் கொடுத்தது போக கடனாக பெற்ற தொகையை மூன்று மாதத்தில் தருவதாக பெற்றுக் கொண்டு கடைசியில் 65 குழுக்களையும் நடுரோட்டில் நிற்க வைத்து விட்டு சென்றுவிட்டனர் இது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து இதனால் வரை நடவடிக்கை எதுவும் இல்லை என்ன காரணம் என்று தெரியவில்லை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் வேலூரில் இருக்கிறார் இடைத்தளராக செயல்பட்டவர் அனைத்து வங்கி மேலாளர்களையும் கையில் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு அதிகாரிகள் தப்பிவிட்டனர் மகளிர் குழுவினர் ரோட்டில் நின்று போராடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது இது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம் உடனடியாக காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தெரிவித்துள்ளார் மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 600 பேரையும் ஒன்று திரட்டி ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow