admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
நீதிக் கட்சியின் வைர தூண் சர்ஏடி.பன்னீர் செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணி மண்டபத்தில் அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.அதிமுகவில் லீமா ரோஸ்க்கு பதவி வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்,நாம் தமிழர் கட்சியில் 9 சட்டமன்ற தொகுதியில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளித்த சீமான்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மந்திரிகள் மற்றும் இரண்டு எம்பிகள் வழங்க வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். எங்கள் சமுதாய மன்னரைப் பற்றி விமர்சனம் செய்து வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அவருடைய கட்சிக்காரர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் எதிராக களம் காணுவோம் அல்லது எதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நிறைய பேர் இருக்கும் பொழுது அவர்களுக்கு அரசியல் கட்சிகள் எம்எல்ஏ எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று தலைவர்களின் மணிமண்டபம் அருகே டாஸ்மார்க் கடை உள்ளது. அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களுடைய அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார். இந்த பேட்டியின் போது நிர்வாகிகள் ஸ்டாலின் தங்கதுரை வழக்கறிஞர் ரமேஷ், தேவகோட்டை கஸ்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Apr 30, 2024 42
admin Dec 20, 2025 42
admin Oct 23, 2024 44
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354