மக்கள் விரும்பும் வேட்பாளர் சமூக சேவகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கீ. காயத்திரி

Mar 17, 2026 - 15:00
 18
மக்கள் விரும்பும் வேட்பாளர் சமூக சேவகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கீ. காயத்திரி

மக்கள் விரும்பும் வேட்பாளர் சமூக சேவகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கீ. காயத்திரி

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்து இறுதி பணிகளிலும் செய்து வருகின்றனர்

வேட்பாளர்களின் தேர்வுகளும் இறுதிச் செய்ய பணிகளும் நடைபெற்று வருகிறது மக்கள் விரும்பு வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் நிறுத்துவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது மக்களின் எண்ணம் என்ன அதற்கான வேட்பாளர் யார் யாருக்கு வெற்றி கிடைக்கும் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அரசியல் கட்சிகள் மிகத் துல்லியமாக கவனமாக மேற்கொண்டு வருகிறது  இந்த நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் முக்கிய அங்கமாக திகழும் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி அரசியல் வட்டாரங்களில் திரும்பிப் பார்க்கும் தனித் தொகுதி யாக அமைந்துள்ளது

 கெங்கவள்ளி  தனி (எஸ்சி) சட்டமன்ற தொகுதி ஆகும் இந்த தனி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் அங்கு வேட்பாளர்களின் வெற்றியை முடிவு செய்யும் இடத்தில் அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் அங்கு உள்ள சட்டமன்ற வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க உள்ளனர்

 இந்த தொகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கிராமப்புறங்களில் கோழி ஆடு வளர்த்தல் கொண்டதாக உள்ளது

 அந்த பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கக்கூடிய கீ காயத்ரி அவர்கள் அந்த பகுதி மக்களுடன் நெருங்கி பழகி வருகிறார் அந்த மக்களின் தொழில் மேம்பாட்டிற்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் பணிகளையும் மேற்கொண்டு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்

 அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி  உள்ளார் இதன் காரணமாக பெண்களுக்கு தேவையான தையல் மிஷின் சேவல் கோழி குஞ்சுகள் ஆடு நலத்திட்ட  உதவிகளையும் தொடர்ந்து கெங்கவள்ளி பகுதியில் செய்துள்ளார் 

இதன் காரணமாக அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பிரமுகர் ஆன கி காயத்ரி இந்த கெங்கவல்லி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்

மேலும் கெங்கவல்லி தொகுதியில் உள்ள பெண்களின் முன்னேற்றமும் பெண்களுக்கான வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தையும் மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் கி காயத்ரி அவர்கள் செய்துள்ளார்
 இதன் காரணமாக அப்பகுதி உள்ள பெண்கள் மத்தியில் கி காயத்ரிக்கான நன்மதிப்பு அதிகரித்து உள்ளது
 மேலும் இங்கு அரசியல் கட்சி என்று பாராமல் கி. காயத்ரி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 
 கி காயத்ரி அவர்கள் இந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் அவரது வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் அவருக்கான வாய்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் வழங்கினால் இந்த பகுதி உள்ள பெண்களுக்கான வாழ்க்கையில் சுய தொழில் துவங்கவும் விவசாயத்தை மேம்பட்டு உதவி வகையில் பல்வேறு பணிகளையும் அவர் மேம்படுத்தி உள்ளார் மேலும் அப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட பற்றியும் தங்கள் குழந்தைகளின் கல்வி கனவையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் உறுதி செய்து கி காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

 இந்த தகவல் ஆனது திராவிட முன்னேற்றக் கழக த்தின் தலைமைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று உள்ளதாகவும் இந்த பகுதியில் கி காயத்ரி அவர்கள் திருமாவளவன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று உள்ளதாகவும் இந்த பகுதியில் கி காயத்ரி அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow