admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
ஏற்காட்டில் வாலிபர் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா? உடல் வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஏற்காடு அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு, கொளகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (32). இவரது மனைவி அபிராமி, பட்டிப்பாடி நடூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடூர் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்த மரம் ஒன்றில் சங்கர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த ஏற்காடு காவல்துறையினர், சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சங்கரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார், அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சங்கரின் உறவினர்கள் வருவதற்கு முன் எதற்காக சங்கரின் உடலை அவசர அவசரமாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்குறைவிற்காக எடுத்துச் சென்றனர் என சங்கரின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சங்கரின் உடலில் மர்மமான முறையில் காயங்கள் காணப்படுவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.. மேலும் சங்கர் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அவரது உறவினருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் நான் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறேன் எனது சட்டையை கழட்டி பாருங்கள் நாளை உண்மை வெளிவரும் என கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவின் காரணமாக தங்களின் உறவினர்களுக்கு விலங்குகளை சுடும் நாட்டுத் துப்பாக்கியால் சங்கரை சுடப்பட்டு இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்கள் சந்தேகிக்கின்றனர். முறையான விசாரணை நடத்தி, உண்மை வெளிவரும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். சங்கரின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதியாகத் தெரியும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Nov 18, 2024 20
admin Nov 5, 2025 14
admin Jul 2, 2025 34
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354