admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
பணி நியமனத்தை எதிர்பார்த்து 22,000 பேர் காத்திருப்பு : காலி பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கோரிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வு,நியமன தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மனு கொடுத்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 2013 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் மற்றும் நியமனத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் தேர்வர்களின் சார்பாக இந்த மனுவை மிகுந்த மரியாதையுடன் சமர்ப்பிக்கிறோம். 2013 முதல் 2022 வரை பல்வேறு ஆண்டுகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதி மற்றும் நியமனத் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனினும், இந்த நீண்ட காலகட்டத்தில் நியமனங்கள் மிகக் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டதால், ஆயிரக்கணக்கான தகுதி பெற்ற தேர்வர்கள் பல ஆண்டுகளாக பணிநியமனம் இன்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புகளின்படி, 2021 முதல் 2024 வரை தொடக்கப் பள்ளிப் பிரிவுகளில் சுமார் 14,038 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது சுமார் 14,000 ஆசிரியர்கள் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இத்தனை காலிப்பணியிடங்கள் உள்ள நிலையிலும், சமீபத்திய நியமனத்தில் 2,457 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இத்தேர்வுகளில் பங்கேற்றவர்களில் சுமார் 80% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிநியமனத்தை எதிர்பார்த்து வரும் இவர்களின் நிலை, சுமார் 22,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதித்து வருகிறது. இத்தேர்வர்கள் அனைவரும் அரசு நிர்ணயித்த அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, தங்களின் தகுதியைத் தேர்வுகள் மூலம் நிரூபித்தவர்களே ஆவர். எனவே, ஏற்கனவே தகுதித் தேர்வுகள் மற்றும் நியமனத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை எந்தவித மறுதேர்வும் இன்றி முழுமையாக நியமிக்க அரசாணை வெளியிட அரசு தயவு செய்து பரிசீலிக்க வேண்டுமென மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நீண்ட காலமாக காலிப்பணியிடங்கள் நிலுவையில் உள்ள நிரப்பப்படுவதோடு, மாநிலத்தின் அரசுப் பள்ளிக் கல்வித் துறையும் மேலும் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை. எமது கோரிக்கைக்கு மாண்புமிகு தங்களின் கருணைமிகு கவனமும், சாதகமான முடிவும் கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Mar 23, 2026 83
admin Nov 21, 2025 14
admin Sep 16, 2024 22
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354