admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம்
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாணவி ர. ரலிஷா, உலக சுகாதார அமைப்பு (WHO) அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மனிதர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் நச்சுத்தன்மையின் அளவைப் பொருத்து வகைப்படுத்தப்படுவதை விளக்கினார். அதன்படி, சிவப்பு நிறம் – மிக அதிக நச்சுத்தன்மை (Extremely Hazardous) மிகக் குறைந்த அளவே உயிருக்கு ஆபத்தானது. மஞ்சள் நிறம் – அதிக நச்சுத்தன்மை (Highly Hazardous) மிகுந்த கவனத்துடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீல நிறம் – மிதமான நச்சுத்தன்மை (Moderately Hazardous) பொதுவாக விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது. பச்சை நிறம் – குறைந்த நச்சுத்தன்மை (Slightly Hazardous) பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் ஆபத்து குறைவாக இருக்கும். மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து, பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஊரக வேளாண்பணி அனுபவத்தின் மூலம் மாணவிகள் நடைமுறை அனுபவம் பெறுவதோடு, விவசாய சமூகத்திற்கு பயனுள்ள அறிவையும் வழங்கி வருகின்றனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Nov 30, 2025 21
admin Sep 18, 2025 27
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354