வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தின் வரம்பை உயர்த்த வேண்டும் - எஸ்டிபிஐ வர்த்தக அணி சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை.

Mar 24, 2026 - 15:16
 25
வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தின் வரம்பை உயர்த்த வேண்டும் - எஸ்டிபிஐ வர்த்தக அணி சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை.

 வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தின் வரம்பை உயர்த்த வேண்டும் - எஸ்டிபிஐ வர்த்தக அணி சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வணிகர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். இந்த விதிமுறையில் வணிகர்களுக்கு தளர்வு அளிக்க வேண்டும். வணிகர்கள் ரூ.50,000 க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் முபாரக் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிகழ்வில் வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், திருச்சி மாவட்ட தலைவர் பக்ருதீன், திருச்சி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் முபாரக் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-- மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். குறிப்பாக தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், அதிகமாக வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டில் உள்ள நிலையில் உணவகங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று வேளை ஹோட்டல் நடத்தக் கூடியவர்கள் தற்போது ஒருவேளை நடத்தி வருகின்றனர். இந்த தருணத்தில் தேர்தல் சூழலை காரணம் காட்டி வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்வது, மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. வணிகர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், வணிகர்களுக்கு மின் கட்டணத்தில் இரண்டு ரூபாயை தமிழக முதல்வர் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். அது ஓரளவிற்கு ஆறுதலை அளித்தாலும், ஜிஎஸ்டியில் சலுகை தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ₹.35,414 கோடிக்கு மேல் தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி தொகை செலுத்தப்பட்டு வருகிறது. எனவே ஜிஎஸ்டியில் சலுகை தர வேண்டும், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்க பணத்தின் வரம்பை உயர்த்த வேண்டும், கேஸ் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசு கூடுதல் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow