admin Nov 26, 2025 25
admin Jul 23, 2026 18
admin Jul 22, 2026 117
admin Jul 18, 2026 97
admin Jul 18, 2026 13
admin Jul 13, 2026 17
admin May 25, 2026 31
admin Aug 21, 2025 46
admin Aug 9, 2025 50
admin Aug 9, 2025 173
admin Aug 6, 2025 38
admin Aug 6, 2025 37
admin Sep 6, 2026 6
admin Aug 15, 2026 72
admin Aug 7, 2026 9
admin Aug 3, 2026 12
admin Jul 23, 2026 102
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சேவை குறைபாடு: சார் பதிவாளர் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு செய்த சார் பதிவாளர் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ஸ்ரீபுரம் புதூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர், தனது தந்தையின் பூர்வீக சொத்தான மெத்தை வீடு மற்றும் ஓட்டு வீடு ஆகியவற்றைக் கொண்ட 0.54 சதுர மீட்டர் இடத்தை அனுபவித்து வந்தார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக, இடம் பாகப்பிரிவு ஆவணம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் செட்டிகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார் பதிவாளர், மேற்கண்ட இடத்தில் வில்லங்கம் இல்லையென்பதை தெரிந்து கொண்டு, வேண்டுமென்றே சொத்தின் பதிவுக்கு தடை செய்து, காலதாமதம் செய்து அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பண விரையம், மனஉளைச்சலுக்கு ஆளான சரவணன் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆர். கோபால், டி. சிவசங்கரி ஆகியோர் ஆஜராகினர். மனுவை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைர் டி. சேகர், ஜெ.எஸ். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, சேவைக்குறைபாடு மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்திய மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர், மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Apr 10, 2024 38
admin Apr 6, 2024 34
admin Jul 28, 2024 532
admin Mar 26, 2023 370
admin Apr 29, 2023 354